Details
PUBLISHED
Made available through hoopla
DESCRIPTION
1 online resource
ISBN/ISSN
LANGUAGE
NOTES
"நாகரிக நாட்கள் என நீ கூறுகிறாய் பெண்ணே! இன்றுங்கூட நடையிலே, உடையிலே, நாகரிகத்தைக் காண்கிறோமே தவிர, எண்ணத்திலே பழைய விஷயம் இருந்தபடிதான் இருக்கிறது. உன்னை வலைபோட்டுப் பிடிக்க விரும்பும் அந்தச் சொகுசுக்கார சங்கரன் கூட நாகரிக நாயகனாக நடிக்கிறானே தவிர, உள்ளம் பழைய எண்ணம் நிரம்பித்தான் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்" என்று மங்கம்மாள் கூறினாள். மலர்க்கொடி நகைத்தாள்! அவள் சிரித்தபோதுதான் தெரிந்தது, பற்கள் எப்படி இருந்தால் பாவையருக்கு அழகு தரும் என்பது. சிவந்த இரு அதரங்களையும் கொண்டு மலர்க்கொடி தனது முத்துப் பற்களை மூடி வைத்திருந்தாள். உண்மைதானே! விலையுயர்ந்த வஸ்துக்களைச் சற்றுப் பத்திரமாக வைத்துக் கொண்டுதானே இருக்க வேண்டும். வைர மோதிரத்தை வெல்வெட்டுப் பெட்டியிலும், வரகரிசியை வாசலிலும்தானே போட்டு வைப்பார்கள். மலர்க்கொடியின் அங்கங்கள் ஒன்றை ஒன்று சண்டைக்கு இழுத்தபடி இருந்தன. கண் சொல்லிற்று "நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன் பார். கடல் அலைபோல நான் பாய்வதை நோக்கு. அந்த மோகன மிரட்சியைக் காணு" என்று. புருவங்கள் "சும்மா கிட கண்ணே! நான் மதனன் வில்போல வளைந்து கொடுக்கும் காட்சியன்றோ உன் அழகை எடுத்துக் காட்டுகிறது! நானில்லாவிட்டால் நீ எங்கே, தங்கப் பெட்டிக்குத் தகதகப்பு. வைரத்திலே உள்ள ஒளி - இவைபோலக் கண்ணின் வனப்புக்கு நானன்றோ காரணம்" என்று சொல்லிற்று. நெற்றி சும்மா இருந்ததா? நான் பரந்து பளபளத்து பேழை என இல்லாவிடில், இந்தப் புருவமோ, கண்களோ எங்கு தங்கும் என்று வினவிற்று. "என்னைக் கண்டு காதகரும் காமுறும் அளவு உள்ளேன். நானின்றி நல்ல கண்ணோ, புருவமோ--, நெற்றியோ ஏது" என்று கன்னங்கள் கொஞ்சின
Mode of access: World Wide Web